திண்டுக்கல்லில் தமிழக தமிழாசிரியர் கழகம் சார்பில், விருது பெற்ற தமிழாசிரியர்களுக்கு பாராட்டு விழா, பணி நிறைவு, பணி உயர்வு என முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவர் கவிஞர் விகுரா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பழநி எம் எல் ஏ செந்தில்குமார், மெர்சி பவுண்டேஷன் நிறுவனர் மெர்சி செந்தில்குமார் ஆகியோர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டி சால்வை அணிவித்து கேடயம் வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.