ஓசூர்: கர்னூரில் குட்கா மற்றும் மதுபானங்கள் கடத்தி வந்த கார் : சினிமா பட பாணியில் விரட்டிய போலீசார், 400 கிலோ குட்கா, கர்நாடக மாநில மதுபானங்கள் பறிமுதல்
தமிழகத்திற்கு குட்கா மற்றும் மதுபானங்கள் கடத்தி வந்த கார் : சினிமா பட பாணியில் விரட்டிய போலீசார், 400 கிலோ குட்கா, கர்நாடக மாநில மதுபானங்கள் பறிமுதல் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கார் ஒன்றில் குட்கா போதை பொருள்களை கடத்தி வருவதாக ஓசூர் அட்கோ போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அட்கோ போலீசார், மத்திகிரி போலீசாரின் உதவியுடன் ஓசூர் கர்னூர் பகுதியில் அந்த காரை சோதனை செய்ய நிறுத்தியுள்ளனர்.