திண்டுக்கல், பழனி, RF-ரோடு ஈஸ்வரன் ஹோட்டல் அருகே குடிபோதையில் 4 வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரோந்து பணியில் இருந்த பழனி நகர் காவல் நிலைய காவலர் பிரபு அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் காவலர் பிரபுவை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த பிரபு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் காவலர் பிரபுவை தாக்கிய நான்கு பேரை கைது செய்து விசாரணை