பெரம்பலூர்: 30 ரூபாய்க்கு சன்ன ரக அரிசி - புதிய திட்டம் தொடக்கம்
பெரம்பலூர் மாவட்டத்தில் அமுதம் அங்காடிகள் மூலம் கிலோ 30 ரூபாய்க்கு சன்ன ரக அரிசி வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் அப்துல் ராசிக் தொடங்கி வைத்தார். ரேஷன் அட்டைதாரர்கள் நகரின் மூன்று இடங்களில் உள்ள அங்காடிகளில் அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம்.