திருப்பத்தூர்: பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த வலியுறுத்தி பாரத ஸ்டேட் வங்கி எதிரில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் நகராட்சி பாரத ஸ்டேட் வங்கி எதிரில் இன்று தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் மாநிலம் தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தேசிங்கு ராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் ஜெயகுமார் மற்றும் மாநில மகளிரணி செயலாளர் மதுரா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.