பாளையங்கோட்டை: தூத்துக்குடி விமான நிலைய பார்க்கிங் குளறுபடி: நிறுவனத்திற்கு ரூ.17,000 அபராதம்
தூத்துக்குடி விமான நிலைய பார்க்கிங் சேவையில் வாகனத்தை ஒப்படைக்க மறுத்த ஓமேகா நிறுவனத்திற்கு 17,000 ரூபாய் அபராதம் விதித்து திருநெல்வேலி நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு நஷ்ட ஈடு வழங்க ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.