அரியலூர்: சன்னரக அரிசி குறித்த தவறான தகவல்களை நம்ப வேண்டாம் - மாவட்ட ஆட்சியர்
அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சிறப்பு அங்காடிகளில் சன்னரக அரிசி தரமற்றது என பரவும் செய்திகள் தவறானவை என மாவட்ட ஆட்சியர் திருமதி. ந. மிருணாளினி தெரிவித்துள்ளார். கிலோ 30 ரூபாய்க்கு தரமான அரிசி வழங்கும் திட்டம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.