வால்பாறை: கூழாங்கல் ஆற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களான கூழாங்கல் ஆறு மற்றும் சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி பகுதிகளை பார்ப்பதற்காக குவிந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் கடந்த ஐந்து மாத காலமாக மாவட்ட நிர்வாகம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்காத நிலையில் இன்று காலை 8 மணி முதல் கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளை இறங்க அனுமதித்தது இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக ஆற்றில் இறங்கி புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்