திண்டுக்கல் கிழக்கு: தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு தீக்காய பிரிவு தனி வார்டு அமைப்பு
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் அடைபவர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைப்பதற்காக 20 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு தீக்காய பிரிவு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தலா 10 ஆண்கள், பெண்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்கான வசதிகள், தீக்காயத்துக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன