ஆம்பூர்: எல்.மாங்குப்பம் பகுதியில் தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி கட்டிட தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு உறவினர்கள் கதறல்
ஆம்பூர் அடுத்த எல்.மாங்குப்பம் பகுதியில் கட்டிட தொழிலாளி சுரேந்தர் இன்று பிற்பகல் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக நிலைத்தடுமாறி பேருந்தின் பின் சாக்கரத்தில் சிக்கி தலை நசிங்கி சுரேந்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இது குறித்து உமராபாத் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சுரேந்தரின் உறவினர்கள் அவரின் சடலத்தை பார்த்து கதறி அழுத காட்சி பார்ப்போரின் நெஞ்சை பதற வைத்தது.