பழனி: பாரதிய ஜனதா கட்சியின் பழனி சட்டமன்றத் தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு பழனியில் நடைபெற்றது
தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்து உள்ளது. இதில் அதிமுகவும், பாஜக வும் கூட்டணி அமைத்து உள்ளது. இந்நிலையில் பழனியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பழனி மற்றும் கொடைக்கானல் பகுதியில் உள்ள பூத் கமிட்டி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.