காரியமங்கலம்: காரிமங்கலம் காவல் நிலையத்தில் பரபரப்பு: எஸ்.எஸ்.ஐ மீது மனித உரிமை அமைப்பு நிர்வாகி புகார்
தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் இறந்த கன்றுக்குட்டியை புதைத்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத எஸ்.எஸ்.ஐ ராமசந்திரன் மீது, தலித் மனித உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவர் மதன்குமார் புகார் அளித்துள்ளார். காவல் நிலையத்தில் வாக்குவாதத்தால் பரபரப்பு நிலவியது.