திருவள்ளூர்: கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு மடத்துக்குப்பம் -குப்பம் கண்டிகை இடையிலான தரைப்பாலம் மூழ்கியது
பருவமழை பெய்து வரும் நிலையில் ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீராலும் ராணிப்பேட்டை மாவட்டம் கேசாவரம் அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, ஆற்றின் வழித்தடமான திருவள்ளூர் அடுத்த ராமன் கோவில் மடத்துக்குப்பம் - குப்பம் கண்டிகை இடையே கொசஸ்தலை ஆற்றின் தரைப்பாலம் மூழ்கியுள்ளது,வருட வருடம் பருவமழை காலங்களில் தரைப்பாலம் சேதமடைந்து அப்பகுதியில் போக்குவரத்து துண்டிப்பு ஏற்படுகிறது