பாளையங்கோட்டை: பாலாஜி நகரில் கந்து வட்டி கேட்டு மிரட்டிய அதிமுக பகுதி செயலாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.
ரெட்டியார்பட்டி கார்த்திகேயநகர் அருகே உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் லெனின் ராஜ் இவரது மனைவி ஜெயலட்சுமி இவர் குடும்ப அவசர தேவைக்காக அதிமுக பாளையங்கோட்டை தெற்கு பகுதி செயலாளர் சின்னத்துரை என்பவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார் சின்னத்துரை செல்போனில் லெனின் ராஜ்ஜியம் தொடர்பு கொண்டு சாதி ரீதியாகவும் அவதூராகவும் திட்டியுள்ளார் இதுகுறித்து ஜெயலட்சுமி பெருமாள்புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் இன்று காலை 11 மணியளவில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்