திருநெல்வேலி: பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய திமுக எம்எல்ஏ.
பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது இதனை ஒட்டி நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள அண்ணாவின் திரு உருவ சிலைக்கு நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும் பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் முன்னாள் சபாநாயகரும் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.