பொன்னேரி: கஞ்சாவுடன் சுற்றிய 4 பேர் கைது. 50000ரூபாய் மதிப்புள்ள 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாயுமான் செட்டி தெருவில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நான்கு இளைஞர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த நிலையில் அவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சுமார் 50,000 ரூபாய் மதிப்புள்ள 1.5 கிலோ கஞ்சாவையும், யமஹா இருசக்கர வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்