வேடசந்தூர்: உசிலம்பட்டியில் பெண்கள் சிறந்த நிர்வாக திறமை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்
வேடசந்தூர் வட்டம் உசிலம்பட்டி ஊராட்சியில் உள்ள உசிலம்பட்டியில் சிம்கோடஸ் சார்பில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு சிறந்த நிர்வாகம், தலைமைத்துவம், மற்றும் அதிகாரம் அளித்தலுக்கான சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. அமைதி அறக்கட்டளையின் தலைவர் ரூபபாலன் தலைமையிலும், சிம்கோடஸ் நிறுவன இயக்குனர் மரியரோஸ்லீமா, செயலர் விசுவாசம் ஞானஆரோக்கியம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.