மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 144 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவர் பிறந்த எட்டயபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜிவி மார்க்கண்டேயன் ஆகியோர் பாரதியாரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் தொடர்ந்து பல்வேறு அமைப்பை சார்ந்தவர்கள் மரியாதை செலுத்தினர்.