அணைப்பட்டி வைகை ஆற்றுப்படுகையில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் கோவில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலாகும். தமிழகத்தில் ராமேஸ்வரத்திற்கு அதற்கு அடுத்தபடியாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் பரிகார ஸ்தலம் ஆக இந்த அணைப்பட்டி அருள்மிகு ஆஞ்சநேயர் கோவில் விளங்குகிறது. தை அமாவாசை என்பதால் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் குவிந்தனர்