மாதவரம்: புழல் திருவள்ளூர் தெருவில் வசித்து வரும் கவுன்சிலர் சேட்டின் கார் கண்ணாடியை மர்ம நபர்கள் அடித்து உடைத்தனர் போலீஸ் விசாரணை.
சென்னை மாநகராட்சி 24 வது வார்டு கவுன்சிலர் சேட் புழல் திருவள்ளூர் தெருவில் வசித்து வருகிறார் இவர் வீட்டின அருகே தனது காரை நிறுத்திவிட்டு மீண்டும் காலை எழுந்து வந்து பார்த்தபோது காரின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது இதனை எடுத்து காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தார் தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.