சூளகிரி: கும்பளம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் என்கிற முகாம் நடைபெற்றது. திமுக ஒன்றிய செயலாளர் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூளகிரி வடக்கு ஒன்றியம் கும்பளம் என்னும் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் என்கிற திட்ட முகாம் நடைபெற்றது .. மூன்று ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களுக்கான இந்த முகாம் நடைபெற்ற நிலையில் திமுக ஒன்றிய செயலாளர் நாகேஷ் அவர்கள் பங்கேற்று மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்