தென்காசி: சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் மனம் மகிழ் மன்றத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கூறி ஆட்சியரிடம் கோரிக்கை
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பகுதியில் உள்ள தென்றல் மகள் மன்றத்திற்கு 6 வார கால இடைக்கால தடை வழங்கப்பட்டுள்ள இந்த மதுபான கடைகளை கண்டித்து சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பச்சிளம் குழந்தைகளோடு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் 180 க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இருந்தபோதிலும் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் இன்று சுமார் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தங்கள் பகுதியில் மன மகிழ் மன்றம் அமைக்க வழங்கப்பட்ட விருப்பத்தை ரத்து செய்ய ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்