காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் நவராத்திரி உற்சவம் மற்றும் மகா நவமி முன்னிட்டு கோவில் வளாகத்தில் வீதி உலா வந்த வரதராஜ பெருமாள்
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் நவராத்திரி உற்சவம் மற்றும் மகா நவமியை முன்னிட்டு இன்று ஸ்ரீ வரதராஜ பெருமாள் மற்றும் பெருந்தேவி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் திரு வீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் அப்பகுதியை சுற்றியுள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.