எட்டயபுரம்: சிந்தலக்கரை கிராமத்தில் லாரியின் பின்னால் பேருந்து மோதி இருவர் பலி
எட்டையாபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை நான்கு வழிச்சாலையில் சாலையின் ஓரமாக தண்ணீர் லாரி பிரேக் டவுன் ஆகி நின்று கொண்டிருந்தது. அப்பொழுது சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற அரசு விரைவு சொகுசு பேருந்து பின்னால் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது இதில் பேருந்து ஓட்டுநர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த மகேஷ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக எட்டையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.