திருப்பத்தூர்: நெடுமரம் அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பிள்ளையார்ட்டி இளைஞர் பலி-போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த அஜய் (21), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.மானாமதுரை-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் நெடுமரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். திருப்பத்தூர் காவல்நிலையத்தில் இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது