கயத்தாறு: கடம்பூர் ரயில் நிலையத்தில் நின்ற குருவாயூர் ரயில் எம் எல் ஏ வரவேற்பு
கயத்தாறு அருகே உள்ள கடம்பூர் ரயில் நிலையத்தில் சென்னை குருவாயூர் ரயில் நின்று செல்லாமல் இருந்து வந்த நிலையில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து கடம்பூரில் குருவாயூர் ரயில் நிற்க வேண்டும் என மனு வழங்கினார் இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் குருவாயூர் ரயில் நின்று செல்லும் என அறிவிப்பை வெளியான நிலையில் கடம்பூர் ரயில் நிலையத்தில் நின்ற குருவாயூர் ரயிலுக்கு சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து ஓட்டுனர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்