சிங்கம்புனரி: சிங்கம்புணரியில் பாரத பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக நிர்வாகிகள் வாழ்த்து கோஷங்கள் எழுப்பி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். சீரணி அரங்கத்தில் தொடங்கிய ஊர்வலம், கட்சிக் கொடியுடன் பெரியகடை வீதி வழியாக நான்கு முனை சந்திப்பை அடைந்தது. அங்கு வாழ்த்து கோஷங்கள் எழுப்பி, பொதுமக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ஏராளமான பாஜகவினர் பங்கேற்று, பிரதமரின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினர்