நிலக்கோட்டை: பட்டிவீரன்பட்டியில் W.P.A.சௌந்தரபாண்டியனார் 132 வது பிறந்த நாளை யொட்டி திமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நீதிக் கட்சி தலைவர்களில் ஒருவரான W.P.A.சௌந்தரபாண்டியனார் 132 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பட்டிவீரன்பட்டியில் அமைந்துள்ள சௌந்தரபாண்டியனார் திருவுருவ சிலைக்கு திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செய்தார்.