அரியலூர்: பேருந்து நிலையம் அருகே மத்திய பாதுகாப்பு படையினர் & போலீசாரின் கொடி அணிவகுப்பினை ஆட்சியர் தொடங்கிவைப்பு
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க மத்திய பாதுகாப்பு படையினர் & போலீசாாரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட எஸ்பி செல்வராஜ் உள்ளிட்டோர் தேரடி, சத்திரம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக நடந்து சென்று பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.