திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல் அருகே காரை அடமானம் பெற்று கூடுதல் வட்டி கேட்டு, ரவுடி கும்பலிடம் கார் உள்ளது என்று கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
பொள்ளாச்சியை சேர்ந்த முத்துக்குமார் இவர் அவசர தேவைக்காக தனது காரை பொள்ளாச்சியை சேர்ந்த நண்பர் பார்த்திபன் என்பவரிடம் ரூ.70 ஆயிரத்திற்கு அடமானமாக வைத்துள்ளார். மனைவி வேண்டாம் என்று கூறியதை தொடர்ந்து திருப்பி கொடுத்தபோது பார்த்திபன் வட்டியுடன் சேர்த்து ரூ.80 ஆயிரம் வேண்டும் என்று கூறியுள்ளார். பணத்தைக் கொடுத்து காரை கேட்டபோது மது போதையில் தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்