திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலை பெய்த மழையில் சூழ்ந்த மழைநீர்!
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் திருச்செந்தூர் பகுதியில் சனிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வரை மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர். மேலும், கோவில் மண்டபத்தில் மழைநீர் குளம் போல் ஓடியது. சிவன் கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது.