ஆனைமலை: அங்கலக்குறிச்சி நரி முடக்கு பகுதியில் 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சூறையாடிய காட்டு யானை
அங்கலக்குறிச்சி நரி முடக்கு வனப்பகுதியை ஒட்டி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது இங்கு அவ்வப்போது காட்டுப் பன்றிகள் மற்றும் யானைகள் முகாம் இடுவது வழக்கமாக இருந்து வருவதால் வனத்துறை அனுமதியுடன் விவசாயிகள் தங்கள் தோட்டங்களை சுற்றி மின்வெளி அமைக்கப்பட்டுள்ளனர் இந்த நிலையில் நேற்று இரவு யானைக் கூட்டம் செந்தில் என்பவரது தனியார் தோட்டத்துக்குள் புகுந்து அங்கு 30க்கும் மேற்பட்ட இரண்டு வயது மூன்று வயது உடைய தென்னை மரங்களின் குருத்துகளை ஒடித்து ருசித்து சாப்பிட்டது