பொன்னேரி: சோழவரம் அருகே ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சா பறிமுதல். மூவர் கைது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த காந்தி நகரில் திருவள்ளூரில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற ஆட்டோ ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது இன்று மாலை இடித்துவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது. போலீசார் துரைத்துச் சென்று பிடித்ததில் அந்த அவர்கள் ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்தவர்கள் என்பது தெரிய வந்தது,ஆட்டோ ஓட்டுநர் வியாசர்பாடி சேர்ந்த நவீன் குமார் 26, கொருக்குப்பேட்டை சேர்ந்த பத்மாவதி 55, மணலி புதுநகர் சேர்ந்த தீபா 32 என தெரிய வந்தது. இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் சிறையில் அடைத்தனர்,