தென்காசி: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக 22 ஆம் தேதி திங்கள் கிழமை விமான மூலமாக தூத்துக்குடி விமான நிலையம் வந்து அடைந்தார் பின்னர் அங்கிருந்து கார் மூலம் தென்காசி மாவட்டம் கடையை அருகில் உள்ள கோவிந்த பேரில் உள்ள தனியார் விடுதியில் தங்கிய நிலையில் இன்று 23ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்