வேடசந்தூர்: ரக்சனா மஹாலில் சாலை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக டிசம்பர் மாதம் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் வேடசந்தூரில் சாலை பணியாளர்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்தோடு பங்கேற்கும் பேரணி மற்றும் மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வேடசந்தூர் ரக்சனா மஹாலில் சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் சண்முகராஜா தலைமை வகித்தார். மாநிலத் துணை பொதுச் செயலாளர் பெருமாள், செல்லப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.