பல்லடம்: நெருப்பெரிச்சல் பகுதியில் பாஜக சார்பில் ஜிஎஸ்டி விளக்க கூட்டம் நடைபெற்றது
மத்திய அரசு சார்பில் கடந்த 22ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரிகளில் சீர்திருத்தம் மேற்கொண்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருப்பூர் நெருப்பெரிச்சல் மண்டல பாஜக சார்பில், நெருப்பெரிச்சலில் ஜிஎஸ்டி விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதால், பொதுமக்கள் எவ்வாறு பயன் அடைகிறார்கள் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.