சிவகங்கை: சிவகங்கையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் மறைமாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம் அறிவிப்பு
சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் மறைமாவட்ட நிர்வாகத்தின் 2% ஊதிய பிடித்தத்தை கண்டித்து, ஆயரின் ஆசிரியர் விமர்சனத்திற்கு எதிராக சுவரொட்டி இயக்கம் மற்றும் அக்டோபர் 25-ல் சிவகங்கை அரண்மனை வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.நிகழ்வில் மாவட்ட தலைவர் புரட்சித்தம்பி,மாநில செயற்குழு உறுப்பினர் முத்தூப்பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்