திருத்தணி: கூட்டுறவு சர்க்கரை ஆலையை
மேம்படுத்திட வேண்டும் உள்ளிட்ட
12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் செயல்பட்டு வரும் 40 ஆண்டுகள் பழமையான திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த ரூ. 170 கோடி நிதி ஒதுக்கிட வேண்டும். கரும்புக்கான கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை இந்த அரவை பருவத்திலேயே நிறைவேற்றிட வேண்டும். திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் காலி பணியிடங்களை நிரப்பி கரும்பு வெட்டு கூலியை முறைப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திருத்தணியில் கரும்புகளை கையில் தாங்கியவாறு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்