ஆவடி: திருவேற்காட்டில் வெவ்வேறு இடங்களில் இரண்டு கொலைகள் நடந்ததால் பரபரப்பு
திருவேற்காடு, பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் டில்லிபாபு(25), இவர் திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவன த்தில் சூப்பர் வைசராக வேலை செய்து வந்தார். இன்று காலை இவரது பணி புரியும் கம்பெனிக்கு வந்த இரண்டு பேர் டில்லி பாபு குத்தி கொலை செய்து தப்பினர், விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது வினோத்(24), மற்றும் அவரது நண்பர் மோகன் என தெரியவந்த நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்த போது வினோத்தின் மனைவி நிவேதாவுடன் டில்லிபாபுவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது