பரமக்குடி: மஞ்சள்பட்டினத்தில் கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை, போலீசார் விசாரணை.
ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் அவரது நண்பரான பரமக்குடி மஞ்சள்பட்டிணத்தை சேர்ந்த தினேஷ்பாண்டி  வீட்டில் தங்கி கடந்த 15 தினங்களாக கட்டிட வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.  நேற்று இரவு தினேஷ்பாண்டியின் வீட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் ஒன்றாக மது குடித்த போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முத்துராமலிங்கத்தை அடித்து கொலை செய்து  தப்பி ஓடி விட்டதாக தினேஷ்பாண்டி எமனேஸ்வரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்