வேடசந்தூர்: நேருஜி நகரில் முன்னாள் எம்எல்ஏவின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியசாமி முன்னாள் எம்பி சித்தன் ஆகியோர் பங்கேற்பு
வேடசந்தூர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ தண்டபாணி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நேருஜி நகரில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் பெரியசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என் எஸ் வி சித்தன் மற்றும் திமுக அதிமுக காங்கிரஸ் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.