திருச்செந்தூரில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் திருச்செந்தூர் பேருந்து நிலையம் மற்றும் கோயில்களுக்கு இயக்கப்படும் ஆட்டோக்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் அதிக ஆட்களை ஏற்றி செல்வதாகவும் பல புகார்கள் எழுந்தது இந்நிலையில் திருச்செந்தூர் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ் வேல்முருகன் ஆட்டோ ஓட்டுநர்களை அழைத்து அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் அதிக ஆட்களை ஏற்றுவது உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.