வேடசந்தூர்: நல்லமநாயக்கன்பட்டியில் கொழுக்கட்டைகளை சூறையிட்டு வினோத வழிபாடு
வழிபாட்டிற்கு ஏராளமான பெண்கள் தங்கள் வீடுகளில் கொழுக்கட்டைகள் செய்து வந்து கோயிலில் ஒப்படைத்தனர். அய்யனாருக்கு படையலிட்டு அபிஷேகங்கள் நடந்தபின் கொழுக்கட்டைகளை எடுத்து ஊர் தலைவர் செவ்வந்தி அப்பன் சூறைவிட்டார். ஆண்கள் அனைவரும் போட்டியிட்டு கொழுக்கட்டைகளை கீழே விழாமல் தாவி தாவி பிடித்தனர். இவற்றை கீழே விழாமல் பிடித்தால் வேண்டுதல் நிறைவேறும் என நம்புகின்றனர்.