இயற்கையை பாதுகாக்கவும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக தமிழகம் பாண்டிச்சேரி முழுவதிலும் இருந்து துறவியர் பேரவை மற்றும் கல்லூரி மாணவர் மற்றும் மாணவிகள் ஏன் மொத்தம் 25 பேர் கொண்ட குழுவினரின் சைக்கிள் பயணம் கடந்த ஐந்தாம் தேதி குமரியில் தொடங்கியது. இந்த சைக்கிள் பேரணி இன்று மாலை திண்டுக்கல் நகருக்கு வருகை புரிந்தது. இந்த சைக்கிள் பேரணியை பேகம்பூர் அவர்லேடி பள்ளிக்கு முன்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.