பள்ளிப்பட்டு: மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் விழிப்புணர்வு பேரணியை எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம்  பள்ளிப்பட்டு வட்டத்தில் உள்ள செயின்ட்மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் போதைப் பொருள்  விழிப்புணர்வு பேரணியை திருத்தணி எம்எல்ஏ சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக எமதர்மன் வேடம் அணிந்து விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிப்பட்டு பேரூராட்சி பகுதியில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.