உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்,மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு இணைந்து நடத்திய எச்ஐவி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் முகமை அலுவலகம் முன்பாக தாரை தப்பட்டை முழங்க கிராமிய கலை ஆடல்களுடன் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை கோட்டாட்சியர் திருமலை மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் செல்வகுமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.