நல்லாம்பட்டி சாலை தண்டல்காரன்பட்டி அருகே மினி பஸ்சை 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி பஸ்சின் கண்ணாடியை உடைத்து கண்டக்டரின் பணப்பை மற்றும் செல்போனைகளை பறித்து சென்ற 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் இதில் யுவராஜ், ராசு ஆகிய 2 பேர் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது இவர்கள் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு எஸ்பி பரிந்துரையில் ஆட்சியர், 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்