செங்கல்பட்டு: பள்ளவீரகுப்பம் பகுதியில் பாமக ஒன்றிய பொதுக்கூட்டம்
திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றியம், பள்ளவீரக்குப்பம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருக்கச்சூர் ஆறுமுகம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பாமக வேட்பாளர் மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற தீவிர களப்பணியாற்ற வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் திருக்கச்சூர் ஆறுமுகம் பேசினார்.