திண்டுக்கல் மேற்கு: கொழும்பு சையது முகமது ஆலிம் மேல்நிலைப்பள்ளியில் பனை விதை நடவு செய்யும் பணியை மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார்
திண்டுக்கல் மாவட்டம், ம.மூ.கோவிலுார் கொழும்பு சையது முகமது ஆலிம் மேல்நிலைப்பள்ளியில் பனை விதை நடவு செய்யும் பணியை மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பள்ளியின் அருகில் அமைந்துள்ள சக்கம்பட்டி குளத்தில் 3000 பனை விதைகள் பள்ளியின் பசுமைப்படை, ஜீனியர் ரெட் கிராஸ், சாரணர்கள் சார்பில் 130 மாணவர்கள், மாவட்ட பசுமைத்தோழி மற்றும் வனச்சரக அலுவலர்கள் ஆகியோர் விதை நடவு செய்தனர்.