பெரம்பலூர்: "அய்யனார் கோயிலில் உண்டியல் வைத்தால் தீக்குளிப்போம்", கார்குடியில் இந்துசமயஅறநிலையத்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா கார்குடியில் உள்ள அய்யனார் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறையினர் உண்டியல் வைக்கப் போவதாக தெரிவித்துள்ளனர் ,இதனால் கார்குடி கிராம மக்கள் எங்களுக்கு சொந்தமான கிராம கோயிலில் அறநிலையத்துறை உண்டியல் வைத்தால் நாங்கள் தீ குளிப்போம் என மண்ணெண்ணெயிடுன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது